கூட்டு ஒப்பந்த விடயத்தில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை மாற்று தொழிற்சங்கத்தினர் ஆசையை காட்டி, மோசம் செய்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான, ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அம்பகமுவ உப பிரதேச செயலாளர் காரியாலயத்தினை திறந்து வைத்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அமைச்சர் ஜீவன், பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்பது கூட்டு ஒப்பந்தம் மாத்திரமேயாகும். ஆனால் சிலர் கூட்டு ஒப்பந்தம் தேவையில்லையென கூறுகிறார்கள்.
அத்துடன், எமக்கு இருக்கும் ஒரே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மாத்திரமே, வேறு எவரும் கிடையாது. எதிர்கட்சியினர் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றனர். எனவே தொடர்ந்தும் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருப்பார் என அவர் தெரிவித்தார்.