பால்மாவுக்காக ஒன்று திரண்ட மக்கள் கூட்டம்

உள்நாட்டு பால்மா நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதற்கான காரணத்தை கண்டறியுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

மிஹிரிஹான, ஸ்டேன்லி திலகரத்ன மாவத்தையிலுள்ள கடையொன்றில் ஜன்னல் வழியாக பால்மா விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் அவதானிக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பொதுமக்கள் வரிசையில் நிற்காமல் பால்மா கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறித்த பால்மா நிறுவனத்தின் தலைவர் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய அண்மையில், பொலிஸாரால் மிஹிரிஹான பகுதியில் கலைக்கப்பட்ட, பால்மாவிற்காக ஒன்று திரண்ட மக்களின் கூட்டம் இன்று (31/12) மீண்டும் ஒன்று திரண்டமை அவதானிக்கப்பட்டது.

பின்னர் பால்மா உற்பத்தி நிறுவனத்திற்கு முன்பாக ஒன்று திரண்ட மக்களிடம் பொலிஸார் டோக்கன் வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தியதுடன், இன்று டோக்கனை வழங்கி அடுத்த நாள் பால்மாவை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தி கூட்டத்தை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பால்மாவுக்காக ஒன்று திரண்ட மக்கள் கூட்டம்

Social Share

Leave a Reply