வவுனியாவில் நாளை (13.09) தடுப்பூசி ஏற்றுமிடங்கள்

வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசிகள் ஏற்றப்படவில்லை. நாளைய தினம் மீண்டும் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கவுள்ளன. அதனடிப்படையில் வவுனியா நகர வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையங்களில் ஊசிகள் ஏற்றப்படவுள்ளன.

ஆசிரியர்களுக்கான ஊசிகள் ஏற்றும் பணிகள் நாளை முன்றாவது நாளாக வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் ஏற்றப்படவுள்ளன.

அரச அலுவலகர்களுக்கு வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் நாளைய தினம் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் நடைபெறவுள்ளன.  மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, இலங்கை மின்சார சபை, நீர்ப்பாசன திணைக்களம் ஆகிய திணைக்களங்களின் ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நீண்ட நாள் மற்றும் தொற்றா நோயுள்ளவர்களுக்கு ஊசிகள் ஏற்றப்படவுள்ளன. காலை வேளையிலேயே செல்வதன் மூலம் ஊசிகளை   வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ள முடியும்.

வவுனியா வடக்கு மற்றும் தெற்கு வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் ஊசியேற்றப்பட்ட நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. குறித்த பிரிவு வைத்திய அதிகாரி பணிமனைகளில் மறு அறிவித்தல் வரை அரசதிணைக்கள அலுவலர்களுக்கும், ஊசி ஏற்றிக்கொள்ளாதவர்களுக்கும் ஊசிகள் ஏற்றப்படவுள்ளன.

அத்தோடு நடமாடும் வாகன ஊசியேற்றும் சேவையும் நடைபெறவுள்ளது.

இன்று (13.09.2021)  தடுப்பூசி வழங்கும் நிலையங்கள்

தடுப்பூசி வழங்கும் நிலையம்கிராம சேவகர் பிரிவு
வவுனியா காமினி மகா வித்தியாலயம்அரச திணைக்களங்கள்
வவுனியா மாவட்ட வைத்தியசாலைநீண்டநாள் நோயுடையவர்கள்
சைவப்பிரகாச மகளிர் கல்லூரிகல்விசார் ஊழியர்கள்
கணேசபுரம் மகா வித்தியாலயம்மரக்காரம்பளை
புதுக்குளம்  மகாவித்தியாலயம்புதுக்குளம் சாஸ்திரிகூழாங்குளம்
தவசியாகுளம் மகாவித்தியாலயம்ஈச்சங்குளம்
பூவரசங்குளம் வைத்திய சாலைபூவரசங்குளம் பம்பைமடு செக்கடிப்பிலவு வேலங்குளம் சாலம்பைக்குளம் பாவற்குளம் படிவம் 04 பாவற்குளம் படிவம் 05 & 06 குருக்கள் புதுக்குளம்
பாவற்குளம் வைத்தியசாலை ராசேந்திரங்குளம் சூடுவெந்தபிலவு பாவற்குளம் படிவம் 02
சிதம்பரபுரம் வைத்தியசாலைஆசிகுளம், சமலங்குளம், வன்னிக்கோட்டம், சிதம்பரபுரம், சிதம்பரநகர்,கோமரசன்குளம், கல்நாட்டினகுளம், கல்வீரன்குளம், தரணிக்குளம், மதுராநகர்
ஓமந்தை வைத்தியசாலைநொச்சிகுளம் கள்ளிகுளம் சேமமடு பன்றிகெய்தகுளம் ஆறுமுகத்தான்புதுக்குளம் ஓமந்தை மகிழங்குளம் இளமருதங்குளம் 
நவ்வி வைத்தியசாலைமருதமடு புல்மோட்டை
செட்டிகுளம் வைத்தியசாலை செட்டிகுளம் முகத்தான் குளம் கிறிஸ்தவகுளம் கன்கன்குளம் பாவற்குளம் படிவம் 09 முதலியார் குளம் ஆண்டியா புளியங்குளம் கந்தசாமிநகர் 
கணேசபுரம் வைத்தியசாலைபெரியதம்பனை பெரியகட்டு கன்னட்டி பிரமநாலன்குளம்
நேரியகுளம் வைத்தியசாலை  நேரியகுளம் சின்னசிப்பிக்குளம் மரதமடுவ  பெரியபுளியங்குளம்
வடக்கு வைத்திய அதிகாரி பணிமனைஅலுவலர்கள், பொதுமக்கள்
தெற்கு வைத்திய அதிகாரி பணிமனைஅலுவலர்கள், பொதுமக்கள்

வவுனியாவில் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள எங்கள் இணைய தளத்தை பார்வையிடுங்கள்.

எமக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே தகவல்களை தருகிறோம். 100% தகவல்களை வவுனியா மாவட்ட சுகாதார பணிமனை, தங்களுக்குரிய வைத்திய அதிகாரி பணிமனை, கிராம சேவையாளர் ஆகியோரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

வவுனியாவில் நாளை (13.09) தடுப்பூசி ஏற்றுமிடங்கள்

Social Share

Leave a Reply