2022ஆம் ஆண்டுக்கான முதல் தவணை ஆரம்பம்

2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (03/01) ஆரம்பமாகியுள்ளது.

இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை கட்டணத்தை அதிகரிப்பதற்கு நேற்று (02/01) தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய இன்று முதல் பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணங்களை 20 சதவீதத்தால் அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை மாகாணங்களுக்கு இடையிலான பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இன்று முதல் அனைத்து அரச ஊழியர்களும் வழமைபோன்று சேவைக்கு அழைக்கப்படுவதாக அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான முதல் தவணை ஆரம்பம்

Social Share

Leave a Reply