‘நாளை அறிவிக்கப்படும்’- இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம

அமுல்படுத்தப்படவிருக்கும் பேருந்து கட்டணங்கள் தொடர்பான விபரங்களை நாளை (04/01) அறிவிக்கவுள்ளதாக, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கடந்த 29ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்திற்கு அமைய, நாளை மறுதினம் (05/01) முதல் பேருந்து கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாளை முழுமையான விபரங்கள் தொடர்பில் அறிவிக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, பேருந்து கட்டணத்தின் குறைந்தபட்ச தொகை 3 ரூபாவால் அதிகரிக்கட்டு 17 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய பேருந்து கட்டணங்களை 17 சதவீதத்தால் அதிகரிக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

'நாளை அறிவிக்கப்படும்'- இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம

Social Share

Leave a Reply