சீன ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

இலங்கைக்கான சீனத் தூதுவர் மூலமாக சீன ஜனாதிபதிக்கு, ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஜனநாயக முறைமையின் கீழ் முதலாவது சந்தர்ப்பத்திலேயே நீக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த 15 வருட காலத்தில் வெளிநாடுகள் மற்றும் நிறுவனங்களுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை மீண்டும் ஆராய்ந்து, ஊழல் மோசடிகள் காணப்படும் அனைத்து உடன்படிக்கைகளும் இரத்துச் செய்யப்படும் என அவர் குறித்த கடிதத்தில் சீன ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் அல்லது பொது தேர்தல் மக்களின் கருத்துக்கணிப்புடனேயே நடைபெறும் என அவர் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அல்லது அனுகூலமற்ற அனைத்து உடன்படிக்கைகளையும் மறுசீரமைக்க அல்லது இரத்துச் செய்வதற்கு இதன்போது மக்களின் அதிகாரம் கோரப்படும் என அக்கடிதத்தில் மேலும் விளக்கமளித்துள்ளார்.

சீன ஜனாதிபதிக்கு பறந்த  கடிதம்

Social Share

Leave a Reply