மாகாண சபை தேர்தலை நடாத்துவது தொடர்பில் அரசாங்கத்தில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில இன்று (04/01) தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தலை நடாத்துமாறு எந்தவொரு வெளிநாட்டினதும் அழுத்தங்களும் நாட்டிற்கு இல்லை எனவும், அவ்வாறான அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
மாகாணசபை தேர்தலை நடாத்துவது தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. மாகாண சபை தேர்தல் முறை திருத்தகங்களை செய்யும் அந்த குழு மார்ச் மாதமளவில் தேர்தலை நடாத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
இதேவேளை இந்தியா அரசாங்கம் மாகாணசபை தேர்தலை விரைவு படுத்தி நடத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.
