இம்மாதம் 10ஆம் திகதியன்று அமைச்சரவையில் மாற்றங்கள் சில ஏற்படுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி விவசாய அமைச்சு உள்ளிட்ட முக்கிய அமைச்சுகள் சிலவற்றில் மாற்றம் நிகழும் எனவும், அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முந்நாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவின் பதவி வெற்றிடத்துக்கும் புதிய ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவாரென அறியமுடிகிறது.
மேலும் இடைநிறுத்தப்பட்டுள்ள பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.