கடினமான சந்தர்ப்பங்களை எதிர்கொண்டு வரும் இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்க தயாரென, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கருவின் கீழ் நேற்று (06/01) இந்தியா – டெல்லியில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கைக்கு தொடர்ச்சியான ஒத்துழைப்புகளை வழங்க இணங்கியுள்ள அதேவேளை, இந்திய – இலங்கை திருகோணமலை எண்ணெய் தாங்கிகளின் அபிவிருத்தி ஒப்பந்தமானது இருதரப்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.