மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பில் கலந்துரையாடல்

மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கான காணி உரிமையை பெற்றுக் கொடுப்பதற்காக முழு மூச்சாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாக, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

சிவில் சமூகத்தினருடனும், சமூக மற்றும் கல்வி ஆர்வலர்களுடனும் நேற்றைய தினம் (06/01) அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் பற்றி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் பல முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்தமைக்கு அமைய, மலையக மக்களுக்கான வீட்டு பிரச்சினை என்பது ஒரு பக்கம் இருக்க காணி உரிமையும் நிச்சயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அதற்கான ஒரு வரைமுறையை தயார் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து ஒரு அறிக்கையொன்றினை கையளிக்கும் பட்சத்தில் அதனூடாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாட தான் தயாராகவிருப்பதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறித்த கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.

மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பில் கலந்துரையாடல்

Social Share

Leave a Reply