இந்தியா – குஜராத் உலகளாவிய முதலீட்டாளர் உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கான வாய்ப்பை நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ மீண்டும் இழக்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் கொவிட் பெருந்தொற்றின் காரணமாக இந்நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் ஒரு கட்டமாக நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கும் இந்திய பிரதமருக்கும் இடையில் நாளை மறுதினம் (10/01) சந்திப்பு ஒன்றும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த சந்திப்பு இடம்பெறுவதற்கான சாத்தியம் இல்லை என அறியமுடிகிறது.
கடந்த டிசம்பர் மாதம் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர், பா.ஜ.க கட்சி தலைவர்கள் ஆகிய முக்கிய உயர் அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார்.
எனினும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போனது. இதனை தொடர்ந்து மீண்டும் இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் நிலையில், திரும்பவும் அதற்கான வாய்ப்பு நழுவும் நிலையில் உள்ளது.