பொலிஸார் துர்த்தியமையினால் இளைஞர் மரணமென சந்தேகம்

திருகோணமலை-புல்மோட்டை வலத்தாமலை சேற்றுப் பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சடலம் நேற்று (07.01) காலை மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த சின்னவன் என்றழைக்கப்படும் 21 வயதான ஜெமீல் நிஸ்வர் எனவும் தெரியவருகின்றது.

குறித்த பிரதேசத்தில் உள்ள சேற்றில் சடலமொன்று காணப்படுவதாக வயலுக்குச் சென்ற காவலாளியொருவர் குச்சவெளி பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து இச்சடலம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எஸ்.சாஹிர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்ட போது, பொலிஸார் தனது கணவனை துரத்தி சென்றமையினாலேயே தனது கணவர் இறந்திருக்கலாமென்ற சந்தேகத்தை இறந்தவரின் மனைவி பதில் நீதவானுக்கு தெரிவித்துள்ளார்.

சடலத்தை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனையை முன்னெடுக்குமாறும், புல்மோட்டை பொலிஸ் நிலையத்தினால் விசாரணைகளை முன்னெடுக்குமாறு திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரிக்கு கட்டளையிட்டார்.

தனது கணவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தாகவும், பொலிசார் கைது செய்வதற்கு வீட்டுக்கு வந்ததாகவும் அப்போது அவர் தப்பி ஓடியதாகவும் பின்னர் தானும் கணவரும் பஸ்ஸில் பயணித்து கொண்டிருந்தபோது, யான் ஓயா பாலத்தை அண்மித்த பகுதியில் பஸ்ஸை மறித்து தனது கணவரை பொலிஸார் கைது செய்ய முற்பட்டவேளை, இரண்டாவது தடவையும் கணவர் தப்பி ஓடியதாகவும் நீதவான் முன்னிலையில் இறந்தவரின் மனைவி தெரிவித்தார்.

பஸ்ஸிலிருந்து தன்னை வாகனத்தில் ஏற்றிச் சென்று நீண்ட நேரத்தின் போது திரியாய் சந்தியில் வைத்தியசாலைக்கு அருகில் இறக்கிவிட்டதாகவும், அப்போது அங்கு வந்து பொலிஸார் “கணவர் வீட்டுக்கு வருவார் கூறியதாகவும், அங்கே வந்த பொலிஸ் குழுவில் தனக்கு அருகில் நின்ற பொலிசாரின் உடையில் சேறு இருந்ததாகவும்” அதனால் தனது கணவரை பொலிஸார் துரத்தி சென்றமையினாலேயே சேற்றில் சிக்குண்டு உயிரிழநதிருக்கலாம் எனவும் மனைவி நீதிவான் முன்னிலையில் சந்தேகத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

பொலிஸார் துர்த்தியமையினால் இளைஞர் மரணமென சந்தேகம்

Social Share

Leave a Reply