உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மேலும் ஒரு வருடத்திற்கு பிற்போடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது.
இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விடயங்களை நீக்கி குறித்த வர்த்தமானி வெளியிடப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரண சிங்கவிற்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளமையினால் அவரால் தேர்தலை பிற்போடுவது தொடர்பான வர்த்தமானியை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
