சீனாவின் கறுப்புப் பட்டியலில் இருந்து தம்மை நீக்குமாறு இலங்கை மக்கள் வங்கி அறிவித்துள்ளது.
சீன உர நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கடன்பத்திரத்திற்கு அமைய குறித்த கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாகவும், அதனை சீன தூதரகத்துக்கு தாம் அறிவித்துள்ளதாகவும் மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.
எனவே, இன்றைய தினத்திற்குள் (10/01) குறித்த கறுப்புப்பட்டியலில் இருந்து தம்மை நீக்கிக்கொள்ள எதிர்பார்ப்பதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.
