குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுளளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
6 கோடி ரூபா பண மோசடி சம்பவத்தில் சந்தேக நபராக கைது செய்யப்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
