பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 5 தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சட்டமா அதிபரின் ஆலோசனையின்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க, தெரிவித்துள்ளார்.
கொழும்பு மெகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இவர்களை விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2019 ஆம் ஆண்டு இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பளை, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஐவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.