இலங்கை, தென்னாபிரிக்கா மூன்றாவது 20-20 இன்று

இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலன மூன்றாவதும், இறுதியுமான 20-20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. தென்னாபிரிக்கா அணி 2-0 என தொடரை வென்றுள்ள நிலையில் இலங்கை அணி இன்றாவது வெற்றி பெற போராடுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இலங்கை அணி மிக மோசமாகவும், ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படும் வகையிலும் 20-20 போட்டிகளில் விளையாடியுள்ளது.
தென்னாபிரிக்கா அணி தொடரில் வென்றுள்ள நிலையில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வினை வழங்குமென எதிர்பார்க்கலாம். இலங்கை அணி சில மாற்றங்களை துடுப்பாட்டத்தில் செய்யும் வாய்ப்புகளுள்ளன. அவிஷ்க பெர்னாண்டோ இன்று விளையாடும் அதேவேளை கமிந்து மென்டிஸ் விளையாடும் வாய்ப்புகளுள்ளன. சரித் அசலங்க, பானுக ராஜபக்ஷ ஆகியோர் இன்று நீக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .

போட்டி ஆரம்பிக்கும் நேரத்திலிருந்து எமது இணையதள முகப்பு பக்கத்தில் போட்டியினை நேரடியாக பார்வையிடலாம்.

இலங்கை, தென்னாபிரிக்கா மூன்றாவது 20-20 இன்று

Social Share

Leave a Reply