சர்வதேச தடுப்பூசி திட்டத்தில் 194 நாடுகளில் இலங்கை 3ஆவது இடத்தில் காணப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த நூற்றாண்டில் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற பாரிய வெற்றி இதுவாகும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தடுப்பூசி மூலம் நாட்டுமக்களின் உயிர்களை அதிகபட்ச ஆபத்தில் இருந்து காப்பாற்றுவதே அரசாங்கத்தின் இலக்கு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நாட்டிற்கு தேவையான மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தேவையான தீர்வுகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளார்.
