இலங்கையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி தேங்காய் ஒன்று 15 ரூபாயில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
விளைச்சல் குறைவடைந்துள்ளமையின் காரணமாக தேங்காயின் விலையை அதிகரிக்க நேர்ந்ததாக இலங்கை தெங்கு செய்கையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உரமின்மையின் காரணமாக விளைச்சல் குறைவடைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.இதனை தொடர்ந்து சந்தையில் தேங்காய் ஒன்று 80 தொடக்கம் 95 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
