முத்துராஜவெல வழக்கு விசாரணைக்கு வந்தது

முத்துராஜவெல சரணாலயத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பான முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இப்பணியில் ஏதேனும் சிரமங்கள், இடையூறுகள் இருக்குமாயின் அறிக்கை முன்வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கர்தினால் மற்றும் சுற்றாடல் நீதிக்கான மத்திய நிலையம் தாக்கல் செய்த மனு நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் நேற்று (13/01) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு எதிர்வரும் மார்ச் 04ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

முத்துராஜவெல வழக்கு விசாரணைக்கு வந்தது

Social Share

Leave a Reply