வவுனியா – பூனாவை பகுதியில் ஏ9 வீதியில் இன்று (14/01) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
அதிசொகுசு பேருந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பூனாவை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பேருந்தொன்று மோதி விபத்துக்குள்ளானதுடன் குறித்த பகுதியில் பயணித்த மற்றுமொரு அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளான பேருந்துடன் மோதியுள்ளது.
இந்நிலையில் சம்பவத்தில் காயமடைந்த 12 பேர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
