பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட புகையிரத நிலைய அதிபர்கள் நேற்று மாலை தமது பணிப்புக்கணிப்பை கைவிட்டுள்ளனர். அதன் காரணமாக நேற்று தடைப்பட்டிருந்த புகையிரத சேவைகள் இன்று வழமைக்கு திரும்பியுள்ளன. புகையிரத நிலைய அதிபர்களின் பணிபுறக்கணிப்பு காரணமாக பயணசீட்டுகளை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டமையினால் பல இரயில்கள் நிறுத்தப்பட்டன. அதன் காரணமாக பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
மீண்டும் புகையிரத நிலைய அதிபர்கள் பணிக்கு திரும்பியுள்ளமையினால் பயண சீட்டு வழங்குதலும், முற்பதிவு செய்தலும் வழமைக்கு திரும்பியுள்ளன.
