ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு இன்று (18/01) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
இதில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் உள்ளிட்ட விசேட பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்போது முற்பகல் 10 மணியளவில் கொள்கை விளக்க உரை ஜனாதிபதியினால் முன்வைக்கப்படவுள்ளதுடன் அந்த விளக்க உரை மீதான ஒத்தி வைப்பு வேளை விவாதம் நாளை (19/01) மற்றும் நாளை மறுதினம் (20/01) இடம்பெறவுள்ளது.