உள்நாட்டு பிரஜைகளை தவிர்க்கும் விடுதிகளுக்கு எச்சரிக்கை

வெளிநாட்டு பிரஜைகளுக்கு மாத்திரம் என்ற கொள்கையை பின்பற்றி வரும் சுற்றுலா விடுதிகளின் அனுமதிப் பத்திரங்கள் இரத்து செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில உணவகங்கள் மற்றும் விடுதிகளில் வெளிநாட்டு பிரஜைகளுக்கு மாத்திரம் முன்னுரிமை அளிக்கப்பட்டு, உள்நாட்டு பிரஜைகளின் முன்பதிவுகள் என்பன தவிர்க்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்று வருவமானால், குறித்த விடுதிகள் மற்றும் உணவகங்களின் அனுமதிப் பத்திரங்கள் இரத்து செய்யப்படுமென சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

உள்நாட்டு பிரஜைகளை தவிர்க்கும் விடுதிகளுக்கு எச்சரிக்கை

Social Share

Leave a Reply