பொரளையில் உள்ள தேவாலயத்தினுள் கைக்குண்டு வைக்கப்பட்டு, பொலிஸார் அதனை மீட்டிருந்தினர். அந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலை பகுதியில் வைத்து அவர் நேற்று (18/01) கைது செய்யப்பட்டதாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எம்பிலிப்பிட்டிய – பனாமுர பகுதியில் நேற்று முன்தினம் (17/01) கைதான நிலையில், இதற்கு முன்னர் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.