களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்குத் தேவையான டீசல் பற்றாக்குறை காரணமாக அந்த மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு பிரிவின் செயற்பாடுகள் நேற்று (18/01) பாதிப்படைந்திருந்தன.
இந்நிலையில், குறித்த மின்னுற்பத்தி நிலையத்திற்கு எரிபொருளை வழங்குவதற்கு கனியவள கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 500 மெட்றிக் டொன் படி 8 நாட்களுக்குத் தேவையான எரிபொருளை இன்று (19/01) விடுவிக்கவுள்ளதாகவும் இந்த எரிபொருள் இன்று முதல் மின்சார உற்பத்தி பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இதேவேளை, இன்று மாலைக்குள் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு எரிபொருளை வழங்குவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளதால் இன்றைய தினம் மின் வெட்டு இடம்பெறாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.