HIV தொற்றாளர்களுக்கு புதிய சிகிச்சை முறை!

இலங்கையில் HIV அபாயத்தைத் தடுப்பதற்காக “Prep” எனும் புதிய வகை சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய HIV தடுப்பு குழு தெரிவித்துள்ளது.

மேலும், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து HIV கட்டுப்பாடு சிகிச்சை மையங்களிலும் இந்த சிகிச்சையை பெற்றுக்கொள்ள முடியும் என வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்தார்.

அந்த மருந்துகள் மற்றும் பரிசோதனைகள் அனைத்தும் HIV தொற்றுடன் ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் கோவிட் தொற்று காரணமாக பரிசோதனைகள் தடைபட்ட நிலையில், 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் புதிய HIV நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை 48% அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இவ்வாண்டின், 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், 165 புதிய HIV தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்,

மேலும் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆண்கள் என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply