ICC ஊழல் தடுப்பு தலைவராக இலங்கையர் நியமனம்

சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் சுயாதீன தலைவராக, இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றும் சுமதி தர்மவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இன்று சர்வதேசக் கிரிக்கெட் பேரவை இதனை அறிவித்துள்ளது. இவர் விளையாட்டு அமைச்சின் பல விளையாட்டு தொடர்பிலான சட்ட விடயங்களில் ஈடுபட்டு வருபவர் என சர்வதேசக் கிரிக்கெட் பேரவை மேலும் தெரிவித்துள்ளது.

சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் சுயாதீன தலைவராக, கடந்த 14 வருடங்களாக கடமையாற்றிய சேர் ரொனி ப்லங்கொண் பதவி விலகிய நிலையையில் சுமதி தர்மவர்தன இந்த நியமனத்தை பெற்றுள்ளார். நவம்பர் முதலாம் திகதி முதல் இவர் பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.

சுமதி தர்மவர்தன, இன்டர்போல் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அமைப்பு போன்றவற்றோடு இணைந்து விளையாட்டில் ஊழலை விசாரிப்பதோடு, விளையாட்டுத் தடுப்புச் சட்டம் தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் பல விசாரணைகள் மற்றும் வழக்குகளை மேற்பார்வையிட்டுள்ளார். ஏனைய சர்வதேசவிளையாட்டு நிறுவனங்களுடனான கலந்துரையாடல்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளிலும் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

Social Share

Leave a Reply