‘உங்களுக்கு வீடு – நாட்டுக்கு எதிர்காலம்’ என்ற வீடமைப்பு வேலைத்திட்டத்தின் உதவித்தொகையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தற்காலிக வீடுகளில் வசித்து வரும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக கடந்த 2020ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இக்கருத்திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் குடும்பமொன்றுக்கு 600,000 ரூபா உதவித்தொகையொன்று வீடமைப்பு நிர்மாணத்தின் முன்னேற்றத்திற்காக வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் அதன் பின்னர், கட்டுமானப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளமையால், 600,000 ரூபா உதவித்தொகையை அதிகரிக்க பிரதமர் அமைச்சரவையில் யோசனை முன்வைத்திருந்தார்.
அதன்படி 2022 ஆம் ஆண்டு தொடக்கம் தெரிவு செய்யப்படும் பயனாளி குடும்பங்களுக்கு குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் செலுத்தப்படும் உதவித்தொகையை 650,000 ரூபா வரை அதிகரிப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.