மேல் மாகாணத்தை மையப்படுத்தி 40 இடங்களில் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகாரசபை இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் 17 இடங்களிலும் கம்பஹா மாவட்டத்தில் 13 இடங்களிலும் களுத்துறை மாவட்டத்தில் 10 இடங்களிலும் இந்தத் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28/01) மற்றும் சனிக்கிழமைகளில் (29/01) இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, நாட்டில் வருடாந்தம் 95,000 மெற்றிக் டொன் இலத்திரனியல் கழிவுகள் சேருவதாகவும் ஆகவே சுற்றாடலில் இவை பாரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும் தெரிவித்தார்.
அத்துடன் கடந்த 2021 ஆம் ஆண்டளவில் நாட்டில் 121,000 மெற்றிக் டொன் அளவில் இலத்திரனியல் கழிவுகள் சேகரிக்கப்பட்டு இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.