கொவிட் தொற்றுக்கு எதிராக மூன்றாம் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாத நபர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது.
சுகாதார அமைச்சின் சட்டப் பிரிவு இதுதொடர்பில் ஆராய்ந்து வருவதாக வைத்தியர் ஹேமந்த ஹேரத் கருத்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை நிலையாக பேணுவதற்கு, பூரண தடுப்பூசி செலுத்துகை இன்றியமையாத காரணியாக அமைந்துள்ளது.
ஆனால் நாட்டில் மீண்டும் கொவிட் பரவல் அதிகரித்து வருகின்றது. என்றபோதிலும் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதில் மக்கள் ஆர்வமின்றி இருக்கின்றனர்.
ஆகையால் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாத நபர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்தார்.
