இந்தியா கிரிக்கெட் அணியின் தலைவர் விராத் கோலி தான் 20-20 அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 20-20 உலக கிண்ண தொடருக்கு பின்னதாக தான் அணி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகவும், துடுப்பாட்ட வீரராக மாத்திரம் அணியில் விளையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடி வருவதனாலும், 5 தொடக்கம் 6 வருடங்கள் வரை மூன்று வித கிரிக்கெட் அணிகளுக்கும் தலைமை தாங்குவதாலும் பணிச்சுமை அதிகமாக காணப்படுவதாக விராத் கோலி தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணியின் தலைமை பொறுப்பை தொடர தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அணியின் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி மற்றும் ரோஹித் ஷர்மாவுடன் கலந்தாலோசித்தே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக விராத் கோலி மேலும் தெரிவித்துள்ளார்.