அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா இடையான வரலாற்று பாதுகாப்பு ஒப்பந்தத்தை கண்டிக்கும் சீனா.

அக்கஸ் எனும் பெயரில் உருவாக்கப்பட்ட இவ் ஒப்பந்த உடன்படிக்கையை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் அவரது அவுஸ்ரேலிய பிரதிநிதி ஸ்காட் மோரிசன் ஆகியோர் இணைந்து கடந்த புதன்கிழமை ஊடக சந்திப்பொன்றில் அறிவித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இணைந்து நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை அவுஸ்ரேலியா வழங்கவுள்ளமை தொடர்பாக ஒப்பந்தமிடப்பட்டுள்ளது. இதற்கு கண்டணம் தெரிவிக்கும் வகையில் சீன அரசு இவ் விடயம் தொடர்பாக மூன்று நாடுகளுக்குமான கூட்டணி குறுகிய மனப்பாண்மையுடனும் பொறுப்பற்றவிதத்திலும் செயற்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.

இவ் ஒப்பந்தமானது தென் சீனக்கடலில் சீனாவின் செல்வாக்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக பலராலும் நோக்கப்படும் அதே வேளை குறித்த பகுதி பல ஆண்டுகளாக சீனாவின் செல்வாக்கிற்குட்பட்டுள்ள முக்கிய பகுதியாகும்.

இவ்விடயம் தொடர்பில் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், “புதிதாக அறிவிக்கப்பட்ட கூட்டணி மூலம் பிராந்திய அமைதியை கடுமையாக பாதிக்கும், நாடுகளிடையான ஆயுதப் போட்டியையும் தீவிரப்படுத்தும். இதுவொரு பனிப்போன் மனநிலைகும். இந்த நாடுகள் தங்கள் சொந்த நலன்களைப் பாதிப்பிற்குட்படுத்துகின்றன” என்று எச்சரித்துள்ளார்.

மேலும், சீன அரசு ஊடகங்களும் குறித்த ஒப்பந்தத்தைக் கண்டித்து தமது தலையங்கங்களை வெளியிட்டுள்ளன. க்ளோபல் டைம்ஸ் செய்தித்தாளில் இவ்விடயம் தொடர்பாக, அவுஸ்ரேலியா தற்போது சீனாவின் எதிரியென குறிப்பிட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மூன்று நாடுகளுக்கு இடையேயான மிக முக்கியமான பாதுகாப்பு ஏற்பாடாக ஆக்கஸ் கூட்டணி உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இக் கூட்டணியானது இந்த நாடுகளுடன் இணைந்து நியூசிலாந்து, கனடாவையும் உள்ளடக்கிய த பைவ் ஐஸ் இன்ரெலியன்ஸ அலியன்ஸ் கூட்டணியிலிருந்து வேறுபட்டதாக இருந்தாலும் அக் கூட்டணி போன்று இதுவும் இராணுவ திறனை முக்கிய நோக்காக கொண்டு செயற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில்
ஆசியா சமூகம்சார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கை பொகென்ஸ்டீன் என்பவர், “இவ் ஒப்பந்தமானது மூன்று நாடுகளும் சீனாவின் மீதான ஆக்ரோஷமான நகர்வுகளைத் தொடங்குவதற்கும், தாக்கதல்களை எதிரகொள்வதற்கும் மணலில் ஒரு கோட்டை வரைவதைக் குறிக்கின்றது” எனவும்,

இங்கிலாந் பிரதமர் போரிஸ் ஜோன்சன் “இவ் ஒப்பந்தமானது உலகெங்கிலும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதுடன், நூற்றுக்கு மேற்பட்ட உயர் திறன் வாய்ந்த வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்” எனவும்,

இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ், “வரலாற்றில் மிகப்பெரிய இராணுவ செலவினங்களில் ஒன்றை சீனா தொடங்குகிறது. சீனா தனது கடற்படையையும், விமானப்படையையும் பாரிய அளவில் பலப்படுத்தி வளர்த்து வருகிறது. அதனால், குறித்த பிராந்தியங்களில் உள்ள எமது தரப்பினர் தங்கள் சொந்த நிலத்தில் நிற்க விரும்புகிறார்கள்.” எனவும் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா இடையான வரலாற்று பாதுகாப்பு ஒப்பந்தத்தை கண்டிக்கும் சீனா.
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா இடையான வரலாற்று பாதுகாப்பு ஒப்பந்தத்தை கண்டிக்கும் சீனா.

Social Share

Leave a Reply