பிரான்ஸில் 70 சதவீதமானோர் முழுமையாக தடுப்பூசியான இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் போட்டுள்ளனர். இது உலகின் மிக உயர்ந்தளவு தடுப்பூசி போட்டுக்கொள்ளப்பட்ட விகிதங்களில் ஒன்றாகும்.
பிரான்சில் கடந்த புதன்கிழமை சுகாதார, வீட்டுப்பராமரிப்பு மற்றும் தீயணைப்பு சேவை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்கியதையடுத்து பிரான்ஸ் ஜனாதிபதியால் செப்டம்பர் மாதம் 15ம் திகதிக்குள் குறைந்தது முதலாவது தடுப்பூசியாவது போட்டுக்கொள்ளப்படல் வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
12 வயதிற்கு மேற்பட்டோருக்கு பிரான்ஸில் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. அறிவித்தலின்; பின்னர் மக்கள்; தடுப்பூசி போட்டுக்கொண்டபோதும் பலர் தடுப்பூசிபோடுவதற்கு முன்வரவில்லை.
இந்நிலைமை சுகாதாரத்துறையைப் பாதிக்கும் எனக்கருதி வைத்தியர்கள், தாதிமார்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் ஏனைய சுகாதார துறையினர் என ஆயிரக்கணக்கான சுகாதார ஊழியர்கள் தடப்பூசியனால் பயம் மற்றும் அதன் செயல்திறன் நம்பிக்கையின்மை காரணமாக தடுப்பூசி போடவில்லை என உறுதிப்படுத்தியதையடுத்து பிரான்ஸில் சுமார் மூவாயிரம் சுகாதார ஊழியர்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் பிரான்ஸில் சுகாதார சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதாக குறிப்பிட்ட போதும் பிரான்ஸ் சுகாதார அமைச்சர், சிலருக்கான இடை நீக்கங்கள் தற்காலிகமானவை. அதன் காரணமாக தற்போது பலர் தடுப்பூசிகளைப் போடுவதற்கு முன்வந்துள்ளதாக கூறியுள்ளார்
மேலும், பிரான்ஸ் ஊடகங்கள் குறித்த சேவை சில வைத்தியசாலைகளில் குறித்த சில மணிநேரங்களுக்குத் தடைப்பட்டதாகவும் தற்போது நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.