ஊடகங்கள் தகவல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் – நாமல்

ஊடகங்கள் தாங்கள் வெளியிடும் தகவல்களுக்கு பொறுப்பேற்க தயாராக இருக்கும் வரை, தரவு பாதுகாப்பு சட்டம் தொடர்பில் ஊடகங்கள் கவலைப்பட தேவையில்லை என விளையாட்டு துறை, இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று(10.03) பாராளுமன்ற உரையில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில், தரவு பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர் நாமல் ராஜபக்ச, “தகவல் தொடர்பான பிரச்சினைகள் எழாதிருக்க ஊடகவியலாளர்கள் தாங்கள் வெளியிடும் தகவல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்” என தெரிவித்ததோடு “ஊடகவியலாளர்கள் குறிப்பிட்ட நபர் ஒருவர் தகவல் கொடுத்ததின் அடிப்படையில் செய்திகளை வெளியிட்டதாக கூறாமல் சரியான தகவல்களின் அடிப்படையில் செய்திகளை வெளியிடவேண்டும். அதற்கான பொறுப்பு அவர்களுக்கு உண்டென நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்தை சம்பந்தப்பட்டவர்களோடு விவாதிக்காது அரசாங்கம் சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளளமையினால் , தாங்கள் இந்த சட்டத்தை எதிர்ப்பதாகவும், சில ஊடகங்களும் இந்த சட்டத்தை எதிர்த்துள்ளன” என்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொரோடோ லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த சட்டத்துக்கான விவாதத்தை ஒத்திவைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி ஆலோசனைக் குழுகூட்டத்தில் கோரிக்கையினை முன் வைத்ததாகவும் அந்த கோரிக்கை அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

“தகவல் அறியும் சட்டத்தில் எந்த பாதிப்பையும் இந்த சட்ட மூலம் ஏற்படுத்தாது. யாரேனும் இந்த சட்டத்துக்கு எதிராக இருந்தால் அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்க வேண்டும். குறித்த காலக்கெடுவிற்குள் சட்ட நடவடிக்கை எடுக்காமல் பாராளுமன்றத்தில் சட்டமூலத்தை எதிர்ப்பதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஊடகங்கள் தகவல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் - நாமல்

Social Share

Leave a Reply