எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாடளாவிய ரீதியில் அரச மற்றும் தனியார் துறைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக அரச மருந்தாளர் சங்கம் எச்சரித்துள்ளது.
புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான மருந்துகளின் எண்ணிக்கை இன்னும் குறைவாகவே உள்ளதாக அரச மருந்தாளர் சங்கத் தலைவர் அஜித் திலகரத்ன தெரிவித்துள்ளார்.
அவசர தேவைகளுக்கான மருந்துகளை தட்டுப்பாடின்றி முன்னுரிமை அடிப்படையில் இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் மருந்து தட்டுப்பாடுகள் ஏற்படாமல் தடுக்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுளளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.