இலங்கை எதிர் இந்தியா

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி தொடர் நிறைவடைந்துள்ளது. நடைபெற்ற இரண்டு போட்டிகளும் மூன்று நாட்களுக்குள் முடிந்து போயின.

இலங்கை அணியின் மிக மோசமான சொதப்பல் இவ்வாறு போட்டிகள் மூன்று நாட்களுக்குள் முடிய காரணமாகி போயின. சிரேஷ்ட வீரர்கள் சிறப்பாக செயற்படா விட்டால் இனியும் ஏன் அவர்களை அணியில் வைத்திருக்க வேண்டும்? ஆனால் புதிய வீரர்கள் கூட பிரகாசிக்க தவறியுள்ளனர்.

இந்திய ஆடுகளங்கள் இலங்கை அணிக்கு பெரிய பிரச்சினையாக ஒரு போதும் இருக்க மாட்டாது. அப்பிடி இருக்க துடுப்பாட்டத்தில் தடுமாறுவது மிக மோசமான எடுத்து காட்டு.

இந்தியா அணி தன்னை மேலும் நிரூபித்து அணியின் வரிசையினை சீர் செய்கிறது. இரண்டு சிரேஸ்ட வீரர்களை அணியியினால் தூக்கிவிட்டு சிறப்பாக சாதித்தும் காட்டி விட்டார்கள். புதிய வீரர்கள் அணிக்குள் வந்ததும் கைகொடுப்பது அவர்களுக்கு மேலதிக பலம்.

ஆனால் இலங்கை அணியோ தொடர்ந்தும் அதாள பாளத்துக்குள் செல்கிறது. எவ்வாறு இலங்கை அணியினை மீட்டு எடுப்பதென்பதே பெரிய சவால்.

விராத் கோலி துடுப்பாட்டத்தில் சொதப்பி வருகிறார். ஆக இவரை அணி தலைமை பொறுப்பிலிருந்து தூக்கியது சரிதான். அடுத்து அணியிலிருந்துமா?

Social Share

Leave a Reply