பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் காவி வண்டி உரிமையாளர் சங்கம் மேற்கொண்டு வந்த பணி பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகமவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் எரிபொருள் காவி வண்டி உரிமையாளர் சங்கம் இந்த முடிவினை எடுத்துள்ளது.
அதனடிப்படையில் இன்று பிற்பகல் முதல் மீண்டும் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் குறித்த சங்கம் தாம் கோரிய கட்டண அதிகரிப்பை வழங்கவிலை என தெரிவித்து பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு எரிபொருள் விநியோகத்தில் இருந்து விலகியிருந்தனர்.
அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் 14 ஆம் திகதி அறிவிக்கப்பட்டதன் படி 17 வீத அதிகரிப்பு உடனடியாக வழங்கப்படுவதாகவும், ஜனவரி மாதம் வரையில் நிலுவையிலுள்ள தொகையினை மார்ச் 25 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படுமெனவும், ஏப்ரல் முதலாம் திகதி முதல் மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படுமெனவும் அமைச்சர் உறுதி வழங்கியதனை தொடர்ந்து எரிபொருள் காவி வண்டி உரிமையாளர் சங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
