“சிங்க பெண்ணே” தரமுயர்ந்த ஆடை தொழிற்சாலை பெண்ணின் வாழ்க்கை

வவுனியா ஒமேகா லைன் தொழிற்சாலையில் ஐந்து வருடங்களை நிறைவு செய்து ஆறாவது வருடத்தை ஆரம்பித்த்துள்ள திருமதி லோஜி, தன்னுடைய வாழ்க்கை மாறியதாகவும் முன்னேற்றமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கையினை எவ்வாறு வாழவேண்டுமென அறிந்து கொண்டதே இங்கே வேலைக்கு வந்ததன் பின்னர் என தெரிவித்துள்ள அவர், எதிர்கால வாழ்க்கையினை எவ்வாறு வாழவேண்டும், எவ்வாறு திட்டமிட வேண்டும் என பல விடயங்களை அறிந்து கொண்டதாக கூறியுள்ளார்.

பெண்ணாக இருந்து கொண்டு இந்த சமூகத்தில் போராடவும், குடும்பத்தை நடாத்தி செல்வம் இந்த வேலை பெருமளவில் உதவுவதாகவும், தனியே இங்கே வழங்கப்படும் சம்பளம் மட்டுமன்றி வழங்கப்படும் பயிற்சிகள், முகாமைத்து கையாளுகைகள் வாழ்க்கை முகாமைத்துவதை இலகுபடுத்துவதாகவும் தெரிவித்தார்.

மூன்று பிள்ளைகளோடு, வேலை செய்யவும், குடும்பத்தை பராமரிக்கவும் ஒமேகா லைன் வவுனியாவில் வேலை செய்வது கொடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். சகல வசதிகளும், மிகச் சிறப்பான பாதுகாப்பும், நட்புணர்வான முகாமைத்துவ ஊழியர்களும் ஒமேகா லைனில் கிடைப்பது சிறப்பானது என பெருமை கொள்கிறார் லோஜி.

தனது பிள்ளைகளது எத்ரிகாலத்தை இந்த தொழிற்சாலையில் கிடைக்கும் அனுபவம் மூலம் அவர்களை அடுத்த மேல் கட்டம் நோக்கி தான் நகர்த்தி செல்வதாகவும், அவர்களுக்கு நல்ல வசதிகளை வழங்கி சிறந்த கல்வியினையும் வழங்க முடிவதாகவும் தனது சந்தோஷத்தையும் பெருமையையும் வெளிப்படுத்தினார்.

பெண்கள் சமூகத்தில் தலை நிமிர்ந்து நிற்பதற்கு தொழில் முக்கியம். அழுத்தங்கள் அற்ற சிறந்த தொழில் இடம் கிடைத்து விட்டால் அவர்களது உயரம் எட்ட முடியாத அளவுக்கு உயந்து செல்லும். திருமதி லோஜி கூறும் விடயங்களை பார்க்கும் போது அவர் அனுபவிக்கும் சந்தோசம், திருப்தி என்பனவற்றை உணர முடிகிறது.

இவ்வாறான ஒரு தொழிற்சாலையில் வேலை செய்வது சந்தோசம்தான். பலரது வாழ்க்கையில் ஒரு அங்கமாக ஒமேகா லைன் வவுனியா இனைந்துள்ளது என்பது மிகப்பெரிய விடயமே. இத்தாலி நிறுவனம் இலங்கையில் கால் பதித்து, வவுனியாவில் 8 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்து பலரது வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது என்பது சிறந்த சலுகைகளுக்கும், முகாமைத்துவத்துக்கும் முன் மாதிரியாக கூறலாம்.

Social Share

Leave a Reply