வி மீடியா – 200 நாட்கள், 200,000 பார்வையாளர்கள்

வி மீடியா இணையம் ஆரம்பிக்கப்பட்டு 200 நாட்கள் பூர்த்தியாகியுள்ள இன்றைய தினம், 200,000 பார்வையாளர்கள் என்ற மைல் கல்லை தொட்டுள்ளது. இந்த வளர்ச்சிக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும், தொடர்நது ஆதரவு வழங்கும் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த வளர்ச்சி மிக முக்கியமானதாக அமைவதோடு, இலங்கை அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஊடகமாகவும் வி மீடியா இணையம் திகழ்கிறது. இன்னமும் பல விடயங்களை நாம் எமது இணையத்தினூடாக எதிர்காலத்தில் செய்யவுள்ளோம்.

நடுநிலையான, அனைவருக்குமான ஒரு தளமாகவும், நேர்முக தன்மையினை கொண்ட ஊடகமாகவும், எமது ஊடகம் ஊடக விதிமுறைகளுக்கு அமைவாக தொடர்ந்தும் செயற்படும்.

தொடந்தும் கடந்த காலங்கள் போன்று, மேலதிக மேம்படுத்தல்களோடு எமது இணையம் இன்னும் செய்திகளையும், கட்டுரைகளையும் இன்னமும் பல விடயங்களையும் உங்களுக்கு தர தயாராகி வருகிறது.

எமது YouTube தளம் ஊடாகவும் வீடியோ நிகழ்ச்சிகளை தந்து வருகிறோம். தொடர்ந்தும் பல நிகழ்ச்சிகளையும் தரவுள்ளோம். அந்த நிகழ்ச்சிகளையும் எமது இணையத்தில் நீங்கள் பார்வையிடலாம்.

ச.விமலசந்திரன் (விமல்)
பணிப்பாளர்
வி மீடியா

வி மீடியா - 200 நாட்கள், 200,000 பார்வையாளர்கள்

Social Share

Leave a Reply