சர்வ கட்சி மாநாட்டில் தமிழரசு கட்சி கலந்து கொள்கிறது. டெலோ முடிவில்லை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்பாடு செய்துள்ள சர்வ கட்சி மாநாட்டில் தமிழரசுக் கட்சி கலந்து கொள்ளவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்சியிலிருந்து இரண்டு பேர் மட்டுமே பங்குபற்ற முடியுமென்ற நிலையில் தானும், பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் ஆகியோர் சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள் அடங்கலாக சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்க இறைமை பகிர்ந்து வழங்கபபடவேண்டும் என்பதனை தான் வலியுறுத்தவுள்ளதாக இரா.சம்மந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகம் ஆகியவற்றுக்கு தனி தனியாக அழைப்பு வந்துள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வி மீடியாவுக்கு தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பில் தாம் இதுவரையில் முடிவெடுக்கவில்லையெனவும், தீர ஆலோசித்து பின்னரே முடிவெடுக்கப்படுமெனவும் செல்வம் MP தெரிவித்தார்.

தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உடன் அவர்களது முடிவு தொடர்பில் அறிவித்தற்காக தொடர்புகொண்ட போதும் அவரோடு பேச முடியவில்லை.

சர்வ கட்சி மாநாட்டில் தமிழரசு கட்சி கலந்து கொள்கிறது. டெலோ முடிவில்லை

Social Share

Leave a Reply