முல்லைத்தீவில் பேரூந்து விபத்து

யாழ்ப்பாணத்திலிருந்து, முல்லைத்தீவு நோக்கி பயணித்த பேரூந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்து, நான்கு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் பேரூந்து, இலங்கை போக்குவரத்து சபைக்கான பேரூந்தும் போட்டிக்கு ஓடியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. முல்லைத்தீவு, வட்டுவாகல் பகுதியில் 30 பயணிகளுடன் பயணித்த பேரூந்து புரண்டது. இந்த விபத்தில் மேலும் 22 பேர் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேரூந்துகள் தொடர்ந்தும் விதிமுறைகளை தாண்டி ஓடுதல், போட்டி போட்டு ஓடுதல் போன்ற நடவடிவக்கைகளினால் தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அப்பாவி மக்கள் இறப்பதோடு, காயங்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.

அந்தந்த மாவட்டங்களில் போக்குவரத்து சங்கங்கள் இயங்கி வருகின்றன. தேசிய சங்கம் இயங்குகின்றது. இவ்வாறான சம்பவங்களை ஏன் கட்டுப்படுத்த அவர்கள் நடவடிக்கைகள் எடுப்பதில்லை? இவற்றுக்கு இறுக்கமான சட்டங்களை ஏன் இயற்ற முடியாமல் இருக்கிறது?

சரியான சட்டங்களும், இறுக்கமான கட்டுப்பாடுகளும் இல்லாதவரை இவ்வாறான விபத்துகளை கட்டுப்படுத்துவது சாத்தியமற்றதாகவே அமையும்.

முல்லைத்தீவில் பேரூந்து விபத்து

Social Share

Leave a Reply