இலங்கையின் வர்த்தக வணிகத்துறையில் ஈடுபடும் வங்கிகள் வெளிநாட்டு பணபரிமாற்றத்தை மேற்கொள்ளும் அனுமதியினை மத்திய வங்கி மீண்டும் வழங்கியுள்ளது. இறக்குமதியாளர்கள் வங்கிகளினூடாக வெளிநாட்டில் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கான கட்டணங்களை ஒப்பந்த அடிப்படையில் பரிமாற்றம் செய்யும் முறைமை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி முதல் மத்திய வங்கியினால் தடை செய்யப்பட்டிருந்தது.
இந்த தடை நீக்கப்படுவதனால் பொருட்களின் இறக்குமதி மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் குறையுமென நம்பப்படுகிறது. இலங்கை பணத்தினை மேலும் சுழற்சியடைய செய்யும் நடைமுறை இம்மாத ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்டது. இதன் ஒரு கட்டமாகவே இந்த அனுமதி வழங்கப்பட்டுளது.