பாட புத்தக விநியோகம் தாமதம்

பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை அச்சுடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக திணைக்கள ஆணையாளர் நாயகம் P.N இலபெரும தெரிவித்துள்ளார். டீசல் தட்டுப்பாடு, காகித தட்டுப்பாடு மற்றும் மின்தடை ஆகியன காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்க மற்றும் தனியார் அச்சக நிறுவனங்கள் கொரோனா சூழ்நிலை காரணமாக மூடப்பட்டிருந்தன. அதன் காரணமாக அச்சிடத்தல் பணிகள் தாமதமாகியிருந்தன. 3 கோடியே 80 இலட்சம் பாட புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், 3 கோடியே 25 இலட்சம் புத்தகங்கள் இன்னமும் அச்சிட வேண்டியுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலையின் அடுத்த தவணை நிறைவடைதற்கு முன்னர் மீதமுள்ள புத்தகங்கள் அச்சிடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட புத்தக விநியோகம் தாமதம்

Social Share

Leave a Reply