சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் தமக்கு உதவ மூன்று பேர் கொண்ட ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளார்.
இதில் இரண்டு தமிழர்கள் அடங்கியுள்ளமை முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்; இந்திரஜித் குமாரசாமி மற்றும் ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உலக வங்கியின் முன்னாள் பொருளாதார நிபுணர் சாந்தா தேவராஜன் ஆகியோர் அடங்குவர் என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்கவின் ஆலோசனையின் பேரில் மூன்றாமவராக திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநரும் சர்;மினி குரே நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், சர்வதேச நாணய நிதியத்தின் ஆப்பிரிக்காவுக்கான துணை இயக்குநராக இருந்தவராவார்.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைக்கான இலங்கைக் குழுவில் யார் இடம்பெற வேண்டும் என்பதில் இன்னும் முடிவுகள் எட்டப்படவில்லை
இதற்கிடையில் இலங்கை அரசாங்கம் மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை பங்களாதேசிடம் கடனாக கோரியுள்ளது.
பிம்ஸ்டாக் உச்சி மாநாட்டிற்காக கொழும்பு வந்த பங்களாதேஸ் வெளியுறவு அமைச்சர் அப்துல் மொமன் மூலமாக இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பங்களாதேசிடம் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொண்ட இலங்கை, பின்னர் மீளக்கொடுப்பனவையும் ஒத்திவைத்துள்ளது.
இந்த சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவில் அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.
எனினும் சர்வதேச நாணய நிதியத்துடனான உத்தியோகபூர்வ மட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரும் அந்த அமைப்பில் இருந்து அவசரமாக எந்த ஒரு நிதியும் வழங்கப்பட வாய்ப்பில்லை என்று அறியப்படுகிறது