ஊரடங்கு சட்டத்தை மீறி கொழும்பில் வெடித்தது போராட்டம்! திணறும் படையினர் – பாகம் 02

அரசாங்கம் விதித்த வார இறுதி ஊரடங்கு உத்தரவை மீறி 12க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நெலும் பொகுண திரையரங்கிற்கு அருகாமையில் இருந்து கொழும்பு சுதந்திர சதுக்கத்தை நோக்கி ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்தனர்.

எவ்வாறாயினும், அவர்கள் சுதந்திர சதுக்கத்திற்குள் நுழைய விடாமல் பொலிஸாரினால் தடுக்கப்பட்டது.

இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அருகில் கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நெலும் பொகுண திரையரங்கிற்கு அருகில் இருந்து காலை 11.00 மணியளவில் தமது கண்டனப் பேரணியை ஆரம்பித்தனர்.

இந்நிலையில், அத்தியாவசிய தேவைக்காக அன்றி வேறு எதற்காகவும் வெளியில் நடமாட அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட குழுவினர் தற்போது கொழும்பில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும், இப்போராட்டத்தில் பெருமளவானவர்கள் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் எதிர் கட்சி உறுப்பினர்கள் பலர் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery

Social Share

Leave a Reply