ரஸ்சியா மனித உரிமைகள் பேரவையிலிருந்து நீக்கம்

ரஸ்சியா ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமைகள் பேரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. யுக்ரைன் போரின் போது ரஸ்சியா படையினர் மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மனித உரிமைகள் பேரவையில் ரஸ்சியாவை நீக்குதல் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் வாக்களிப்புக்கு விடப்பட்டது. வாக்களிப்பில் ஆதரவாக 93 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் வழங்கப்பட்டன. 58 நாடுகள் வாக்களிப்பில் பங்குபற்றவில்லை. 69 மேலதிக வாக்குகளினால் ரஸ்சியா நீக்கப்படுவதற்கான அங்கீகாம் சபையில் கிடைத்தது.

நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் வருடாந்த கூட்ட தொடர் நடைபெற்றது. அதன் போதே இந்த வாக்களிப்பு நடைபெற்றது

ரஸ்சியா மனித உரிமைகள் பேரவையிலிருந்து நீக்கம்

Social Share

Leave a Reply