மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நிதியமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக பதாதை காட்சிப்டுத்தப்பட்டுள்ளது. இந்த பாதாதை மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
“புதிய நிதியமைச்சராக பதவியேற்கவுள்ள இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு வாழ்த்துக்கள்” என தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணி என்ற பெயரில் இந்த பதாதை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை. பாராளுமன்ற அமர்வுகளில் அவர் கலந்துகொண்டுள்ளார்.
