சிஸ்டம் மாற வேண்டும்- நாமல் ராஜபக்ஷ

அரச முகாமைத்துவ நடவடிக்கைகளில் மாற்றம் தேவையென முன்னாள் விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் இந்த கருத்தினை முன் வைத்துள்ளார்.

அரசாங்கத்துக்கு அரசாங்கம் திட்டங்கள் மாறுபடுவது, அரசுகள் திட்டங்களை தொடர்ச்சியாக எடுத்துச் செல்லாமை ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. இந்த நடைமுறை மாற்றப்படவேண்டும். திட்டங்கள் தொடர்ச்சியாக எடுத்துச் செல்லபபடவேண்டும். 2009 போர் நிறைவடைந்ததும், ஒரு திட்ட நடைமுறை உருவாக்கப்பட்டது. கொரோனா நிறைவடைந்த காலப்பகுதி, தற்போதைய காலப்பகுதி என திட்ட மாற்றங்கள் நடைபெற்றன. மாற்றத்துக்கான பொற்காலமாக இந்த காலத்தை தான் கருதுவதாக நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அரசியலில் மாற்றங்கள் மட்டும் போதாது. முகாமைத்துவதில் தூரநோக்குடைய சரியான அமைப்பு உருவாக்கப்படவேண்டும். ஏற்கனவே அவ்வாறு இருந்த போதிலும், அது தற்போதைய நிலைக்கு ஏற்றால் போல மாற்றப்படவில்லை. நவீன காலத்துக்கு ஏற்றால் போல புதிப்பிக்கப்படவில்லை. இவற்றில் மாற்றங்களின்றி குறிப்பிட்ட சிலரின் மாற்றங்கள் எந்தவிதத்திலும் பயனளிக்காது.

தற்போதைய போராட்டம் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டுக்கு முதலீட்டுக்கு வருவதில்லை. வரமாட்டார்கள். அது சாதாரணமானது. சுற்றுலா பயணிகள் வர மாட்டார்கள். நாடு இவ்வாறான நிலையில் காணபடும் போது யாரும் சுற்றுலா பயணிகளாகவர மாட்டார்கள். மார்ச் மாதத்தில் 1 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் வழமையாக சுற்றுலா பயணிகளாக வருகை தருவார்கள். ஆனால் இம்முறை வரவில்லை.
இவ்வாறான காரணங்களினால் நாடு பின்னடைவை தொடர்ந்தும் சந்திக்கிறது.

இளைஞர்களது போராட்டம் நியமமானது. கோபம் நியாயமானது. ஏதாவது பிழையாக போனால் அரசாங்கத்தின் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் கோபப்படுவார்கள். அதற்காக அவர்கள் குரல் கொடுக்க வேண்டும். இளைஞர்களது அமைதியான போராட்டம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். நல்ல திடங்களை முன் வைக்கின்றனர். அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். அரசாங்கம் பிழை விடும் போது இவ்வாறு ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும் என நாமல் மேலும் கூறியுள்ளார்.

அவர்களது கோரிக்கைக்கு ஏற்றால் போல மாற்றியமைக்கப்படும் அமைச்சரவை, பொருளாதார திட்டங்கள் நிரந்தரமாக அமையுமா என்ற கேள்வியினை எழுப்பிய நாமல் அரசியல்வாதிகளான எங்களது கடமை நிரந்தர திட்டங்களை முன்னெடுப்பது. அவ்வாறான புதிய திட்டங்களில், இளைஞர்கள். நிபுணத்துவமானவர்கள் உள் வாங்கப்படவேண்டும். இலகுவானதாகவும், முதலீட்டாளர்களுக்கு இலகுவானதாகவும் அமைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்தார்கள் ஆட்சியிலிருப்பது முதற் தடவை இல்லை. வெளிநாடுகளில் இடம்பெற்றுள்ளது. இந்தியா அரசுகளிலும், மாநில அரசுகளிலும் இந்த நிலை காணப்படுகிறது.
நிதியமைச்சரை தவிர நாங்கள் அனைவரும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். ஊழல் செய்ததாக கடந்த அரசினால் விசாரணைகள் நடாத்தப்பட்டன. வெளிநாட்டு அரசுகளுக்கு கடிதங்கள் அனுப்பி வெளிநாட்டு கணக்குகள், பணம் தொடர்பில் தேடப்பட்டு அவை பொய்யென நிரூபிக்கப்பட்டன.

இலங்கை முன்னேறுவதற்கான திட்டங்கள் போதாதென குறித்த செவ்வியில் சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ஷ, அனைத்து கட்சிகளும், அரசாங்கம்,எதிர்க்கட்சி இணைந்தது புதிய திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். 2021 ஆம் ஆண்டு தேர்தல் நிறைவடைந்ததும், பல புதிய திட்டங்களை தான் முன் வைத்த போதும், அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அரசியல்வாதிகள் அதனை நிராகரிக்கவில்லை. இந்த சிஸ்டம் நிராகரித்தது. அவை மாற்றமடைந்தால் முன்னேற்றங்கள் உருவாகுமென தெரிவித்த நாமல்,

பாராளுமன்ற அனுபவமிக்க தனது தகப்பன், ரணில் விக்ரமசிங்க, டினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, சம்மந்தன் போன்றவர்கள் தன் போன்ற இளைஞர்களை வழிநடத்தி புதிய திட்டங்களை உருவாக்கினால், நாட்டில் மாற்றங்கள் உருவாகும். முன்னேற்றம் ஏற்படுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சிஸ்டம் மாற வேண்டும்- நாமல் ராஜபக்ஷ

Social Share

Leave a Reply