வைத்தியசாலைகளில் தாதியர் சேவை செய்வார்கள். அதேபோல ஆடை தொழிற்ச்சாலையில் உள்ள சிறிய மருத்துவ நிலையத்தில் சேவை செய்யும் தாதிகள் மற்றும் அவர்களது சேவைகள் தொடர்பில் அங்குள்ள தாதி ஜெனோபி தன்னுடைய கருத்துக்களை வீடியோ பதிவாக தந்துள்ளார்.
ஆடை தொழிற்சாலை ஒன்றில் ஆயிர கணக்கான பெண்கள் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு மருத்துவ சேவைகள் உடனுக்குடன் தேவைப்படும். அதனை செய்து வழங்குகின்றனர் ஒமேகா லைன் வவுனியா நிறுவனத்தில் உள்ள தாதியர்கள்.
வைத்திய பரிசோதனைகள், குடும்ப நலம், அவசர சிகிச்சை, மன நல ஆலோசனை என வைத்தியர் உள்ளடங்கலாக முழுமையான வைத்திய சேவையினை ஒமேகா லைன் வவுனியா தனது நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் வழங்குகிறது.
கடுமையாக வேலை செய்யும் பெண்களுக்கு, மருத்துவ சேவை செய்வதனை சிறந்த சேவையாக கருதும் இவர்கள் தங்கள் குழுவில் இணைந்து கொள்ள மேலும் தாதியர்களை அழைத்து நிற்கின்றனர். அங்கு சென்று அவர்கள் வழங்கும் சேவைகளை பார்க்கும் போது தாதியர்கள் இவ்வாறுதான் சேவை செய்ய வேண்டுமென்ற உணர்வு ஏற்படுகிறது.
அவர்களது சேவைகள் தொடர்பில் முழுமையாக அறிந்து கள்ள கீழுள்ள வீடியோவினை பாருங்கள்.